/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் பணிகள் செய்வதில் ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்
/
தேர்தல் பணிகள் செய்வதில் ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்
தேர்தல் பணிகள் செய்வதில் ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்
தேர்தல் பணிகள் செய்வதில் ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்
ADDED : மார் 23, 2024 11:48 PM
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், ஆரணி லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் நடந்து வருகிறது.
வழக்கமாக தேர்தல் வந்து விட்டால் கட்சி தொண்டர்கள் உற்சாகமாகி விடுவார்கள். தொகுதியில் தனது கட்சி போட்டி போடுகிறதா, கூட்டணி கட்சிக்கு செல்கின்றதா என்பது தெரிவதற்கு முன்பே சுவற்றில் இடம் பிடித்து விடுவார்கள். அப்போதே தேர்தல் தகராறு துவங்கி விடும்.
அடுத்ததாக கட்சி தொகுதியில் போட்டியிடும் என்ற அறிப்பின் போதும், வேட்பாளர் அறிவிப்பின் போதும் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து கொண்டாடுவார்கள். .
வேட்பாளர் முதன் முறையாக ஊருக்குள் வரும் போது பல மணி நேரம் காத்திருந்து பெருங்கூட்டமாக பட்டாசு வெடித்து ஆராவாரம் செய்து மாலை போட்டு வரவேற்பு கொடுப்பார்கள். கட்சி கொடிகளுடன் நடக்கும் ஒவ்வொரு தொண்டரும் தானே தேர்தலில் நின்று விட்டதை போல் எண்ணி பணியாற்றுவார்கள்.
ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சியிலும் தொண்டர்கள் முகத்தில் உற்சாகத்தை காண முடியவில்லை. பணம் கொடுத்த கட்சிகளில் மட்டும் ஆங்காங்கே கிராமங்களில் சுவர் விளம்பரங்களை எழுதி வருகின்றனர். பணம் பட்டுவாடா ஆகாத கட்சிகளில் சுவர் விளம்பரம் எழுதாமல் உள்ளனர்.
கூட்டங்களுக்கும் ஓட்டு கேட்கவும் வரும் தொண்டர்கள் தங்கள் பகுதி நிர்வாகி அழைப்பு விடுத்ததால் வேண்டா வெறுப்பாக வருகின்றனர். கூட்டத்தோடு கூட்டமாக நின்று விட்டு சென்று விடுகின்றனர்.
சுயநலத்தோடு செயல்படும் தலைவர்கள். உண்மையான தொண்டர்கள் என்று தெரிந்தாலும் எதேனும் காரணங்களுக்காக அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் தராமல் ஜால்ராக்களுக்கு பதவியை கொடுப்பது, நம்பிக்கையான தலைமையில்லாதது, தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான கூட்டணி ஆகியன தொண்டர்களின் விரக்திக்கு காரணமாக உள்ளது.
ஒவ்வொரு கட்சியிலும் கட்சிக்கும், தலைமைக்குமான விசுவாசம் மிக்க உண்மை தொண்டர்கள் குறைந்து வருவதை இந்த தேர்தலின் கண்கூடாக காணமுடிகிறது.
-நமது நிருபர்-

