/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் ஒன்றிய கூட்டத்தில் திட்ட பணிகளுக்கு ரூ.1.30 கோடி ஒதுக்கீடு
/
மயிலம் ஒன்றிய கூட்டத்தில் திட்ட பணிகளுக்கு ரூ.1.30 கோடி ஒதுக்கீடு
மயிலம் ஒன்றிய கூட்டத்தில் திட்ட பணிகளுக்கு ரூ.1.30 கோடி ஒதுக்கீடு
மயிலம் ஒன்றிய கூட்டத்தில் திட்ட பணிகளுக்கு ரூ.1.30 கோடி ஒதுக்கீடு
ADDED : ஆக 07, 2024 05:43 AM

மயிலம் : மயிலம் ஒன்றிய கவுன்சில் சாதாரண கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார். துணை சேர்மன் புனிதராமன் வரவேற்றார்.
கூட்டத்தில் மயிலம் ஒன்றியத்தில் உள்ள 47 கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர், சாலை வசதி, சுகாதாரம், பாலம், சத்துணவு மையம் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ 1கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் திட்ட பணியில் நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
செல்வகுமார், கீதா, பரிதா, உமா, சாந்தகுமார், நிவேதா, கண்ணன், தனலட்சுமி, செல்வம், அஞ்ச லாட்சி, கோமதி, கயல்விழி, சரசு, ராஜ்பரத், ஜெயந்தி, ஜமுனாராணி, வசந்தா, கலா, சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அலுவலக மேலாளர்கள் பாபு, வெண்பா, துணை பி.டி.ஒ., ஜெயபால் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். வளர்ச்சி பணிகள் குறித்து 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் ஒன்றிய பொறியாளர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார்.