/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
/
செஞ்சியில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
ADDED : செப் 16, 2024 05:32 AM

செஞ்சி, : செஞ்சி, அப்பம்பட்டில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழாவில் அண்ணாதுரை படத்திற்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தி.மு.க.,வை துவக்கிய அண்ணாதுரையின் 116வது பிறந்தநாள் விழா நேற்று செஞ்சி, அப்பம்பட்டில் தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது. செஞ்சியில் நகர செயலாளர் கார்த்திக், அப்பம்பட்டில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். பொது மக்களுக்கு இனிப்பு, பிரட், பிஸ்கட் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய அவைத்தலைவர் ஆறுமுகம், தொண்டரணி பாஷா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி தலைவர்கள் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.