/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10ம் தேதி அப்ரண்டீஸ் தேர்வு
/
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10ம் தேதி அப்ரண்டீஸ் தேர்வு
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10ம் தேதி அப்ரண்டீஸ் தேர்வு
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10ம் தேதி அப்ரண்டீஸ் தேர்வு
ADDED : மார் 08, 2025 03:55 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், அப்ரண்டீஸ் தேர்வு நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10 ம் தேதி, தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், டி.வி.எஸ்., நிறுவனர், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
இதன் மூலம், என்.சி.வி.டி., மற்றும் நேரடியாக தொழிற் சாலைகளில் புதிதாக தொழிற் பழகுநராக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சி பெறலாம்.
ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சி முடித்து, சான்றிதழ் பெறலாம். பயிற்சின்போது, மாதாந்திர உதவித்தொகை 8,500 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களை பெற, உதவி இயக்குனர், மண்டல பயிற்சி இணை இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம், தொலைபேசி எண்கள் 04146--290673, 04146--294989 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.