/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில் கிராம செயல்வழிக்குழு இலவச பொது மருத்துவ முகாம்
/
ஆரோவில் கிராம செயல்வழிக்குழு இலவச பொது மருத்துவ முகாம்
ஆரோவில் கிராம செயல்வழிக்குழு இலவச பொது மருத்துவ முகாம்
ஆரோவில் கிராம செயல்வழிக்குழு இலவச பொது மருத்துவ முகாம்
ADDED : ஆக 24, 2024 07:09 AM

வானுார் : ஆரோவில் கிராம செயல்வழிக்குழு சார்பில், பொம்மையார்பாளையம் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
ஆரோவில் கிராம செயல்வழிக்குழுவும், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ முகாம் கிராம சேவை மைய வளாகத்தில் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் பாலு (எ) முனுசாமி ஆகியோர் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர். ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட இயக்குவர் ஜெரால்டு மோரீஸ், கவுன்சிலர் விஜயலட்சுமி நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பிம்ஸ் மருத்துவக்குழுவினர் பங்கேற்று, குழந்தைகள் மருத்துவம் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நேற்று துவங்கிய இந்த மருத்துவ முகாம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பொம்மையார்பாளையம் கிராமத்தில், மாலை 5;00 மணி முதல் 7;00 மணி வரை நடக்கிறது.
நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர் பத்மாவதி உலகநாதன், மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன், பயிலக ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

