/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திந்திரிணீஸ்வரர் கோவில் பழமை மாறாமல் கட்ட பா.ஜ.,கோரிக்கை
/
திந்திரிணீஸ்வரர் கோவில் பழமை மாறாமல் கட்ட பா.ஜ.,கோரிக்கை
திந்திரிணீஸ்வரர் கோவில் பழமை மாறாமல் கட்ட பா.ஜ.,கோரிக்கை
திந்திரிணீஸ்வரர் கோவில் பழமை மாறாமல் கட்ட பா.ஜ.,கோரிக்கை
ADDED : செப் 04, 2024 11:17 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் வரலாற்று சிறப்புமிக்க திந்திரிணீஸ்வரர் கோவிலை பழமை மாறாமல் கட்ட வேண்டும் என பா.ஜ., இளைஞரணி மாநில செயலாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
நுாறாண்டு பழமை வாய்ந்த திந்திரிணீஸ்வரர் கோவில் வரலாறு கல்மண்டபத்தில் செதுக்கப்பட்டள்ளது.
இதன் மீது பல வண்ண கலவையை பூசி மறைத்துள்ளனர். வரலாற்று சின்னங்களும் அழிக்கப்பட்டுள்ளது.
இங்கு பல சிற்பங்கள் சிதலமடைந்துள்ளது. சிவபெருமானின் நந்தவன தோட்டத்தில் உள்ள மரங்கள், மூலிகை செடிகள் அனுமதியின்றி அகற்றப்பட்டுள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது, தெளிவாக பதில் கூற மறுக்கின்றனர்.
தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள அரசியல், தொழிலதிபர்களை வைத்தும் மிரட்டுகின்றனர்.
இந்த கோவில் புனரமைப்பை அறநிலைய துறை அதிகாரிகள், அரசிடம் அனுமதி பெற்று, தமிழக அரசு நிதி ஒதுக்கி புனரமைப்பு பணி செய்ய வேண்டும்.
இந்த கோவில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டுள்ளதால், அதே நிலையில் நம் முன்னோரின் வரலாற்று பெருமையை நாம் அடுத்த தலைமுறைக்கு பழமை மாறாமல் திந்திரிணீஸ்வரர் கோவிலை கட்ட வேண்டும், என்று கூறியுள்ளார்.