
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
சூர்யா கல்விக் குழும சேர்மன் கவுதம சிகாமணி பிறந்த நாளை முன்னிட்டு விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமிற்கு, கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கினார். முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் விஜயா தலைமையிலான மருத்துவ குழுவினர் 100 மாணவர்களிடமிருந்து ரத்த தானம் பெற்றனர்.
கல்லுாரி முதல்வர்கள் சங்கர், அன்பழகன், பாலாஜி, மதன் கண்ணன், வெங்கடேஷ், துணை முதல்வர் ஜெகன், கில்பட்ராஜ், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் வெங்கடாஜலபதி, தன்னார்வலர் சந்துரு குமார், மருத்துவ சமூக பணியாளர் அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.