/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது
/
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது
ADDED : ஆக 12, 2024 05:53 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கண்டமங்கலம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடலுார் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
விடுதியில் தங்கி படிக்கும் அந்த மாணவி, வீட்டிற்கு வந்து செல்லும்போது, கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கன்னப்பன் மகன் பிரகாஷ், 25; என்ற வாலிபர் அந்த சிறுமியுடன், காதலிப்பதாக கூறி பழகியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்த நிலையில், மாணவி 2 மாதம் கர்ப்பமானார். சமீபத்தில் கரு கலைந்து, ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பிரகாஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.