/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காலை உணவு திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
/
காலை உணவு திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 19, 2024 05:06 AM

செஞ்சி: கணக்கன்குப்பம் ஊராட்சியில் நிதி உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது.
திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
டி.இ.ஓ., செல்வகுமார் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில், சத்துணவு திட்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இந்திரா தேவி, தாசில்தார் ஏழுமலை, பி.டி.ஓ.,க்கள் சீதாலட்சுமி, மலர், துணைச் சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் ஞானம்பாள் பஞ்சமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் சுலோச்சனா ஜெயபால், மகேஸ்வரி, தாட்சாயணி, ஒன்றிய செயலாளர் விஜயராகவன், எட்வர்ட் பிரான்சிஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.