
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் மாத்ரு சக்தி துர்கா வாஹினி சார்பில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
விழுப்புரம் சங்கர மடத்தில் நடந்த பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று, உலக நலன் வேண்டி குத்து விளக்கு பூஜை செய்தனர். மாவட்ட மாத்ரு சக்தி அமைப்பாளர் சுபாஷினி, துர்கா வாஹினி அமைப்பாளர் புஷ்பா பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.