ADDED : ஆக 12, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கடை குடோனில் நிறுத்தியிருந்த கார் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 41; கும்பகோணம் சாலையில் இரும்பு கடை வைத்துள்ளார். இவர், நேற்று முனதினம் இரவு கடை குடோனில் உள்ள கொட்டகையில் தனது 'ஹூண்டாய் ஐ20' காரை நிறுத்தியிருந்தார். நேற்று காலை பார்த்தபோது காரை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.