/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோடைகால கால் பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவு விழா
/
கோடைகால கால் பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவு விழா
ADDED : மே 07, 2024 11:51 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் மாஸ்டர் கால் பந்தாட்ட கழகம் சார்பில் கோடைகால கால் பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
விழுப்புரம் ரயில்வே மைதானத்தில் மாஸ்டர் கால்பந்தாட்ட கழகம் சார்பில், கடந்த ஏப்ரல் 15ம் தேதி கோடைகால கால் பந்தாட்ட பயிற்சி துவங்கியது. பயிற்சியாளர்கள் ஜேம்ஸ்வசந்த், சிவகுரு, பாலகுரு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சிக்கான நிறைவு விழா, ரயில்வே மைதானத்தில் நடந்தது. முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் தலைமை தாங்கி, பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கால் பந்தாட்ட உபகரணங்கள், சிறந்த பயிற்சிக்கான கேடயம், பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில், பவ்டா நிர்வாக இயக்குநர் ஜாஸ்லின் தம்பி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஏ.டி.எஸ்.பி., பாண்டிசெல்வம் உட்பட நிர்வாகிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

