ADDED : ஆக 16, 2024 01:30 AM

வானுார்:ஆரோவில்லில், அரவிந்தரின் 152வது பிறந்த தினத்தையொட்டி, 'போன் பயர்' ஏற்றி கூட்டு தியானம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் அரவிந்தரின் 152ம் ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர், மாத்ரி மந்திர் அருகேயுள்ள ஆம்பி தியேட்டரில் கூடினர்.
அதிகாலை 5:00 மணிக்கு 'போன் பயர்' என்ற பெருந்தீ ஏற்றி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். தியானத்தின் போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது.
பெருந்தீப்பிழம்பின் பின்னணியில், மாத்ரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது. பாரத் நிவாஸ் வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆரோவில் பவுண்டேஷன் இயக்குனர் சொர்ணாம்பிகா தேசிய கொடியேற்றி வைத்தார். ஆரோவில்லில் வசிப்பவர்கள் பங்கேற்றனர்.

