விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட இணைச் செயலாளர் தனசேகர் வரவேற்றார். தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சம்பத் முன்னிலை வகித்தார்.
அரசு பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் சிவக்குமார், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெயகணேஷ் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட துணைத் தலைவர்கள் தட்சணாமூர்த்தி, பழனிவேல், ஜெகதீஸ்வரன், மாவட்ட இணைச் செயலாளர் குணசேகரன், கதிர்வேலு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடைக்கு அனுப்பும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், சரியான அளவில் ஏற்றி அனுப்பும் போது, கிடங்கில் மறு எடையிட்டு அந்த மாதத்திற்கான வண்ண நுாலில் தையல் இட்டு வழங்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் தரமானதாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.