/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மருத்துவம் சார்ந்த படிப்பில் சேர ஆர்வம் தரவரிசையில் முதலிடம் பெற்ற திவ்யா பேட்டி
/
மருத்துவம் சார்ந்த படிப்பில் சேர ஆர்வம் தரவரிசையில் முதலிடம் பெற்ற திவ்யா பேட்டி
மருத்துவம் சார்ந்த படிப்பில் சேர ஆர்வம் தரவரிசையில் முதலிடம் பெற்ற திவ்யா பேட்டி
மருத்துவம் சார்ந்த படிப்பில் சேர ஆர்வம் தரவரிசையில் முதலிடம் பெற்ற திவ்யா பேட்டி
ADDED : ஆக 08, 2024 10:53 PM

விழுப்புரம்: மருத்துவம் சார்ந்த படிப்பில் சேர ஆர்வமாக இருப்பதாக கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற விழுப்புரம் மாணவி திவ்யா தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்தாண்டு கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியானது.
இப்படிப்பிற்கு விண்ணப்பித்திருந்த 17,497 பேரில் 15 மாணவர்கள் கட்-ஆப் மதிப்பெண் 200க்கு 200 எடுத்திருந்தனர். இதற்கான (பி.வி.எஸ்சி., - ஏ.எச்.,) தரவரிசை பட்டியலை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
இத்தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த விழுப்புரத்தை சேர்ந்த மாணவி திவ்யா கூறியதாவது:
'விழுப்புரம் மாவட்டம், கெடார் அடுத்த அகரம்சித்தாமூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது தந்தை ஞானசேகர் விவசாயி, தாய் செங்கேணி குடும்பத் தலைவி. அவர்களுக்கு நான் ஒரே மகள். கெடாரில் உள்ள ரெட்விங்ஸ் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தேன். பிறகு, விழுப்புரம் ஜெயேந்திரா சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்தேன்.
பிளஸ் 2 தேர்வில், தமிழ் 96, ஆங்கிலம் 98, கணிதம் 100, இயற்பியல் 100, வேதியியல் 100, உயிரியல் 100 என மொத்தம் 600க்கு 594 மதிப்பெண் எடுத்துள்ளேன்.
எனக்கு பயாலஜி படிப்பில் ஆர்வம் காரணமாக, மருத்துவம், கால்நடை மருத்துவம் போன்ற படிப்பில் சேர வேண்டும் என மிகுந்த ஆவலில் விண்ணப்பித்து காத்துள்ளேன். தற்போது, கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு துணை நின்ற ஆசிரியர்கள், பெற்றோருக்கு நன்றி.
இவ்வாறு மாணவி தெரிவித்தார்.