/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., ஆலோசனை கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு
/
தி.மு.க., ஆலோசனை கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : செப் 10, 2024 12:17 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை 11ம் தேதி நடக்கிறது.
மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி அறிக்கை:
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை 11ம் தேதி புதன்கிழமை காலை 10:00 மணிக்கு, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி சிறப்புரையாற்றுகிறார்.
மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்கிறார். மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் , துணைச் செயலாளர்கள் இளந்திரையன், கற்பகம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், மகளிர் பிரசார குழு செயலாளர் தேன்மொழி முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
மறைந்த கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது. கட்சியின் முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்பது. அனைத்து கிளைகளிலும் கொடியேற்றுவது. தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்துவது மற்றும் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.