/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்பு
/
போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்பு
ADDED : ஆக 13, 2024 06:14 AM

விழுப்புரம்: விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி கூட்டரங்கில், மாணவ, மாணவிகள் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியை ஏற்றனர்.
கலெக்டர் பழனி தலைமையில், மாணவ, மாணவிகள் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழியேற்றனர். எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
இதில், கலெக்டர் பேசுகையில், 'போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் செயலிழந்து விடும்.
இந்த பழக்கத்தில் இருந்து மீள்வது மிகவும் கடினமாகும். எவரும் போதை பழக்கத்திற்கு ஆளாக வேண்டாம்.
தங்களின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் யாராவது போதை பழக்கத்திற்கு ஆளாகியிருந்தால் துவக்கத்திலேயே அவர்களுக்கு அறிவுரை வழங்குவதோடு, இந்த பழக்கத்தில் இருந்து வெளிவருவதற்கு தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
எஸ்.பி., தீபக் சிவாச், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், உதவி ஆணையர் (கலால்) முருகேசன், அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணலீலா, மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

