/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எருமனந்தாங்கல் ஏரி உடைப்பு: குடியிருப்புகளில் கழிவுநீர் சூழ்ந்தது பொதுமக்கள் கடும் அவதி
/
எருமனந்தாங்கல் ஏரி உடைப்பு: குடியிருப்புகளில் கழிவுநீர் சூழ்ந்தது பொதுமக்கள் கடும் அவதி
எருமனந்தாங்கல் ஏரி உடைப்பு: குடியிருப்புகளில் கழிவுநீர் சூழ்ந்தது பொதுமக்கள் கடும் அவதி
எருமனந்தாங்கல் ஏரி உடைப்பு: குடியிருப்புகளில் கழிவுநீர் சூழ்ந்தது பொதுமக்கள் கடும் அவதி
ADDED : செப் 11, 2024 01:51 AM

விழுப்புரம்,: விழுப்புரம் அடுத்த எருமனந்தாங்கல் ஏரி உடைந்ததால், குடியிருப்புகளை கழிவுநீர் சூழ்ந்தது. இதனால் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் அவதியடைந்தனர்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட காகுப்பம், எருமனந்தாங்கல் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாதாள சாக்கடை குழாய் வழியாக இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிப்பு செய்து விவசாய பயன்பாட்டுக்காக அருகில் உள்ள ஏரிகளில் திறந்து விட திட்டமிடப்பட்டது.
ஆனால், இந்த பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், அருகில் உள்ள எருமனந்தாங்கல் ஏரியில் திறந்து விடப்படுகிறது. இதனால், ஏரி கலிங்கலில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள டாக்டர்ஸ் நகர் நகர், ரோஜா நகர், கணேஷ் நகர், சுபிக்ஷா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றி, கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்த கழிவுநீர், கடந்த 5 நாட்களாக தேங்கியுள்ள போதிலும், இதனை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
மேலும், அப்பகுதியில் தொடர்ந்து கழிவுநீர் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, குடியிருப்புகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நின்றதை பார்வையிட்டு, உடனடியாக கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.