/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., மாநாட்டிற்கு போலீஸ் நோட்டீசிற்கு விளக்க கடிதம்: டி.எஸ்.பி.,யிடம் வழங்கல்
/
த.வெ.க., மாநாட்டிற்கு போலீஸ் நோட்டீசிற்கு விளக்க கடிதம்: டி.எஸ்.பி.,யிடம் வழங்கல்
த.வெ.க., மாநாட்டிற்கு போலீஸ் நோட்டீசிற்கு விளக்க கடிதம்: டி.எஸ்.பி.,யிடம் வழங்கல்
த.வெ.க., மாநாட்டிற்கு போலீஸ் நோட்டீசிற்கு விளக்க கடிதம்: டி.எஸ்.பி.,யிடம் வழங்கல்
ADDED : செப் 07, 2024 07:20 AM

விழுப்புரம் : த.வெ.க., மாநாடு தொடர்பாக போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கான, விளக்கத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று விழுப்புரம் டி.எஸ்.பி.,யிடம் வழங்கினார்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள த.வெ.க.,வின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடத்த அனுமதி கோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கடந்த 28ம் தேதி விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதன்பேரில் அன்று மாலையே ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமையில் போலீஸ் குழுவினர், மாநாடு நடத்த த.வெ.க.,வினர் தேர்வு செய்திருந்த இடத்தை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், பாதுகாப்பு ஏற்பாடு, மாநாட்டிற்கு வருவோரின் எண்ணிக்கை உள்ளிட்ட 21 வகை விபரங்கள் கேட்டு, விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ், கடந்த 2ம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திடம் நோட்டீஸ் வழங்கினார்.
போலீசாரின் நோட்டீசிற்கு உரிய விளக்கத்துடுன் கூடிய ் கடிதத்தை, புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாலை 4:30 மணிக்கு விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷை சந்தித்து அளித்தனர்.
கடிதத்தை பெற்றுக் கொண்ட டி.எஸ்.பி., சுரேஷ், உடன் எஸ்.பி.,யை சந்திக்க சென்றார.் அப்போது, அவரிடம் மாநாடு அனுமதி குறித்து கேட்டதற்கு, உயரதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, பதில் தரப்படும் என்றார்.
தொடர்ந்து வௌியே வந்த த.வெ.க., பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:
த.வெ.க.,வின் முதல் மாநாட்டை வி.சாலையில் நடத்த திட்டமிட்டு, அனுமதி கோரி, விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் மனு அளித்தோம். அவர்கள், மாநாடு இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகளை எழுப்பி நோட்டீஸ் அனுப்பினர்.
அவர்கள் கேட்டபடி 5 நாட்களில், அதற்குறிய பதிலை அளித்துள்ளோம். இதனை பெற்ற டி.எஸ்.பி., உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து 2 நாளில் பதில் அளிப்பதாக கூறியுள்ளார். நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறோம். அதன் பிறகு, தலைவர் விஜய் முடிவு செய்து, மாநாடு தேதியை அறிவிப்பார் என்றார்.
மாநாட்டிற்கு வேறு இடம் பார்த்துள்ளீர்களா எனக் கேட்டதற்கு, விக்கிரவாண்டியில் தான் மாநாடு நடத்த திட்டமிட்டு அனுமதி கோரியுள்ளோம். அதற்கான பதில் வரட்டும். வேறு இடம் குறித்து பிறகு பார்ப்போம் என்றார். மாநாடு அனுமதிக்கு, நெருக்கடி கொடுக்கப்படுகிறதா என்றதற்கு, புஸ்சி ஆனந்த் பதில் அளிக்காமல் சென்றார்.
விஜய் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் கடிதம், விழுப்புரம் எஸ்.பி., மூலம், சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு போலீஸ் உயரதிகாரிகள், அரசு தரப்பில் பரிசீலனை செய்த பின், மாநாட்டிற்கான அனுமதி குறித்த தகவல் வௌியாகும் எனத் தெரிகிறது.