ADDED : ஆக 25, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே காரில் அனுமதியின்றி வெடி பொருட்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்து வெடி பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூர் அங்கன்வாடி அருகே சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த போர்டு கிளாசிக் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், வெடி பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், வானுார் அடுத்த எறையூர், எரிமலையைச் சேர்ந்த ராஜி, 29; என்பதும், கிணற்றில் வெடி வைக்க கடத்திச் சென்றதும் தெரிந்தது.
இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிந்து ராஜியை கைது செய்து காரிலிருந்த 800 வெடி வைக்கும் தோட்டாக்கள், 300 டெட்டனேட்டர்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.