/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்று வழங்க 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
/
மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்று வழங்க 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்று வழங்க 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்று வழங்க 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஆக 04, 2024 11:37 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வாழ்நாள் சான்று வழங்காத மாற்றுத் திறனாளிகளுக்கு, வரும் 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம், மாதம் தோறும் 2000 ரூபாய் பராமரிப்பு உதவித்தொகையாக மாற்றுத் திறனாளிகள் பெற்று வருகின்றனர். குறிப்பாக, மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அறிவுசார் குறைபாடுடையோர், கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டடு குணமடைந்தோர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், பெற்றோர், பாதுகாவலர் நேரில் வருகை தந்து, வாழ்நாள் சான்று படிவம் பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதில் தங்கள் பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று மற்றும் வருவாய் துறை மூலமாக அரசு உதவித்தொகை வழங்கப்படவில்லை என சான்று பெற்று, தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் ஆவணங்கள் இணைத்து சமர்ப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்கீழ் 6,755 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது. இதில் 780 பேர் மட்டுமே வாழ்நாள் சான்று சமர்பித்துள்ளனர். வாழ்நாள் உறுதிமொழி சான்று பெற்று, கடந்த 20ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
தற்போது, வாழ்நாள் சான்று வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு கால அவகாசம் நீட்டித்து வரும் 10ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, உதவித்தொகையை தொடர்ந்து பெற்றிட அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், விபரங்களுக்கு 04146- 290543 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.