ADDED : ஆக 15, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அருகே தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து மகள் கனிமொழி,17; இவர், அன்னியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 பயில்கிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளி சென்ற கனிமொழி, வீட்டிற்கு வரவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் காணவில்லை. காளிமுத்து அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.