/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் போலீஸ் திடீர் மயக்கம் மருத்துவமனையில் அனுமதி
/
பெண் போலீஸ் திடீர் மயக்கம் மருத்துவமனையில் அனுமதி
ADDED : மே 02, 2024 06:39 AM
திண்டிவனம் :திண்டிவனம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது மயங்கிய பெண் போலீஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திண்டிவனம் போக்குவரத்து காவல்நிலையத்தில் பணியாற்றி வருபவர் ராஜகுமாரி, 35; விழுப்புரம் பொம்மூரைச் சேர்ந்தவர் இவர் நேற்று காலை 11.30 மணியளவில் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் வாக்கி-டாக்கி வாங்கிக்கொண்டு திண்டிவனத்திற்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார்.
சென்னை சாலையிலுள்ள கீழ்எடையாளம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, ராஜகுமாரிக்கு மயக்கம் ஏற்பட்டு, வாகனத்தில் சரிந்துள்ளார். அப்போது மயிலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் சங்கரன் அந்த வழியாக வந்துள்ளார்.
அவர் உடன் ராஜகுமாரியிடம் கேட்ட போது, தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே சங்கரன், சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலசை வரவழைத்து, அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவமனையில் ராஜகுமாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

