sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா

/

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா


ADDED : செப் 16, 2024 05:56 AM

Google News

ADDED : செப் 16, 2024 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

செஞ்சி


செஞ்சி, அப்பம்பட்டில் அண்ணாதுரை படத்திற்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

செஞ்சி நகர செயலாளர் கார்த்திக், அப்பம்பட்டில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய அவைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.,


விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, ராஜா, மாவட்ட இளைஞரணி தினகரன், நகரமன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

அ.தி.மு.க.,


விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு நகர செயலர்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதில் ஒன்றிய செயலர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராஜா, பன்னீர் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

திண்டிவனம்


திண்டிவனத்தில் அண்ணாதுரை சிலைக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செஞ்சி ரோட்டில் நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன் தலைமையில் எம்.எல்.ஏ., அர்ஜூனன் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடசன், எம்.ஜி.ஆர்.மன்றம் ஏழுமலை, ரவி, பாசறை ஜெயப்பிரகாஷ், மகளிர் அணி தமிழ்ச்செல்வி, கவுன்சிலர் திருமகள், முன்னாள் கவுன்சிலர்கள் வடபழனி, சக்திவேல், பாலச்சந்திரன், அய்யப்பன், எம்.ஜி.ஆர்.இளைஞரணி உதயகுமார், பன்னீர்செல்வம், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம், செஞ்சி ரோட்டில், தி.மு.க., நகர செயலாளர் கண்ணன் தலைமையில் அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, வர்த்தகர் அணி ஆடிட்டர் பிரகாஷ், நகர துணை செயலாளர் கவுதமன், கவுன்சிலர் தில்ஷாத்பேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் உழவர்சந்தை அருகில் மாவட்ட தி.முக.,தொண்டரணி பிர்லாசெல்வம் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வானுார்


வானுார் தொகுதி அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் வானுார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சக்ரபாணி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், அணி செயலாளர்கள் கார்த்திகேயன், வீரப்பன், ரமேஷ், அப்பாஸ், பாலகிருஷ்ணன், சுமன், அய்யனார், கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் சங்கர், அம்பேத்குமார், ஜெய்பீம், வில்வமணி, சந்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.,


விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர்.

இதில் அமைப்பு செயலாளர் கணபதி, தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துக்குமார் மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், வாஞ்சிநாதன், ரமேஷ், கோதண்டபாணி, நிர்வாகிகள் லோகதாசன், அசோக்குமார், ரங்கநாதன், பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் மாலை அணிவித்தார்.

இதில் நகர செயலாளர் பாபு, வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், முன்னாள் நகர சேர்மன் ரங்கன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, பாசறை செயலாளர் வினோத், மாநில மருத்துவரணி துணை செயலாளர் பொன்னரசு, எம்.ஜி.ஆர்.,மன்ற துணை செயலாளர் குபேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us