/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவி தற்கொலை 'மாஜி' அமைச்சர் நிதியுதவி
/
மாணவி தற்கொலை 'மாஜி' அமைச்சர் நிதியுதவி
ADDED : மார் 04, 2025 09:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: நீட் தேர்விற்கு தயாராகி தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் நிதியுதவி வழங்கினார்.
திண்டிவனம் அடுத்த தாதாபுரத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் மகள் இந்துமதி, 19; நீட் தேர்விற்கு விண்ணப்பித்து, தயாராகி வந்த இவர், இரண்டு நாட்களுக்கு முன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., ஆறுதல் கூறி, 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட பொருளாளர் ரமணன், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை உடனிருந்தனர்.