/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
/
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
ADDED : ஏப் 15, 2024 06:16 AM

வானுார் : வானுார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சததீஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ஜானகிராமன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் குணசேகரன்.
ஜெ., பேரவைச் செயலாளர் வீரப்பன், பாசறை செயலாளர் சுமன், ஒன்றிய மாணவரணி செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி அம்பேத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம்
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கவுதமசிகாமணி எம்.பி., லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், வி.சி., வேட்பாளர் ரவிக்குமார், காங்., மாவட்ட தலைவர் சீனுவாசகுமார், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் சித்திக்அலி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜ் மற்றும் நிர்வாகிகள் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

