/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு போக்குவரத்து கழகம் 410 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
அரசு போக்குவரத்து கழகம் 410 சிறப்பு பஸ்கள் இயக்கம்
அரசு போக்குவரத்து கழகம் 410 சிறப்பு பஸ்கள் இயக்கம்
அரசு போக்குவரத்து கழகம் 410 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : செப் 13, 2024 06:18 AM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மிலாடி நபி விடுமுறை மற்றும் வார இறுதி நாளையொட்டி கூடுதலாக 410 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மிலாடி நபி விடுமுறை மற்றும் வார இறுதிநாட்களை முன்னிட்டு பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வரும் வெள்ளிக்கிழமை (13ம் தேதி), சனிக்கிழமை (14ம் தேதி), ஆகிய நாட்களில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு, இரு மார்க்கங்களிலும் மக்கள் அதிகளவில் பயணம் செய்வார்கள்.
இதனால், விழுப்புரம் அரசுபோக்குவரத்து கழகம் சார்பில், கூடுதலாக வெள்ளிக்கிழமை 205 பஸ்களும், சனிக்கிழமை 205 பஸ்களும் என மொத்தம் 410 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
மேலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து வேலுார், ஓசூர், புதுச்சேரி, திருவண்ணாமலைக்கு கூடுதலாக வெள்ளிக்கிழமை 40 பஸ்களும், சனிக்கிழமை 40 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (15ம் தேதி) 115 சிறப்பு பஸ்களும், செவ்வாய்க்கிழமை (17ம் தேதி) 250 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
பயணிகள் www.tnstc.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து, இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்திகொள்ளலாம்.