
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில் 23ம் ஆண்டு மயான கொள்ளை நடந்தது.
விழுப்புரம் வழுதரெட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில் 23ம் ஆண்டு மயான கொள்ளை உற்சவத்தையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல், சுவாமி வீதியுலாவாக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் மயான கொள்ளை உற்சவம் நடந்தது. பக்தர்கள் சுவாமி வேடமணிந்து பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

