ADDED : ஆக 02, 2024 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் குருபூஜை விழா நடந்தது.
விழுப்புரத்தில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, வி.ஆர்.பி., பள்ளி தாளாளர் சோழன் தலைமை தாங்கினார். ராதா உணவக உரிமையாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் ராஜ்நந்தகுமார் வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ்., வட தமிழகத்தின் மாநில அமைப்பாளர் பிரஷோபகுமார் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், பங்கேற்ற அனைவரும் காவி கொடிக்கு மரியாதை செலுத்தி குரு பூஜை செய்தனர். நகர தலைவர் முரளிதரன் நன்றி கூறினார்.