ADDED : செப் 14, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் குருசாமிப் பிள்ளை தெருவில், டவுன் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார், நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
இதனையடுத்து, கடையில் குட்கா விற்ற விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த சுரேஷ்ராஜை, 29; போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கடையின் உரிமையாளரான, அதே பகுதியை சேர்ந்த திவாகர்,25; மீதும், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.