/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்கன்வாடி, ரேஷன் கடை கட்டடங்கள் திறப்பு விழா
/
அங்கன்வாடி, ரேஷன் கடை கட்டடங்கள் திறப்பு விழா
ADDED : ஆக 19, 2024 12:10 AM

செஞ்சி: வல்லம் ஒன்றியம், களையூர், தொண்டூர் ஊராட்சிகளில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
களையூர் ஊராட்சியில் 10.19 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் தொண்டூர் ஊராட்சியில் 9.77 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர்கள் ஏலக்கண்ணி, அமிர்தம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர்கள் விமலா, சின்னையா வரவேற்றனர். அமைச்சர் மஸ்தான் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
பி.டி.ஓ.,க்கள் உதயகுமார், இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன், ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

