/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கல்
/
பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கல்
ADDED : ஆக 18, 2024 05:19 AM

கண்டமங்கலம், : கண்டமங்கலம் ஒன்றியத்தில் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் வாசன், துணை சேர்மன் நஜீராபேகம் தமின், மாவட்ட கவுன்சிலர் பனிமொழி செல்வரங்கம், ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி முருகன் முன்னிலை வகித்தனர்.
கண்டமங்கலம், வட்டார ஊராட்சி பி.டி.ஓ., மணிவண்ணன் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் திட்ட விளக்கவுரையாற்றினார். அமைச்சர் பொன்முடி கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட 348 பயனாளிகளுக்கு 12.31 கோடியே 57 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணி ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் நித்யகல்யாணி ராமமூர்த்தி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கணேசன், பிரபாகரன், செல்வமணி உட்பட பலர் பங்கேற்றனர். கிராம ஊராட்சி பி.டி.ஓ., சிவக்குமார் நன்றி கூறினார்.