/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆதிதிராவிடர் நலத்துறையில் பணி ஆணை வழங்கல்
/
ஆதிதிராவிடர் நலத்துறையில் பணி ஆணை வழங்கல்
ADDED : செப் 04, 2024 11:06 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கருணை அடிப்படையில் இருவருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பழனி அறிவுறுத்தலின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வளர்மதி தலைமை தாங்கி, திருவெண்ணெய்நல்லுார் அருகே சிறுவானுார் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ், என்பவருக்கு சித்தலம்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி சமையலர் பணிக்கு கருணை அடிப்படையிலான ஆணையும், குறுபீடபுரம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு வெள்ளிமேடுபேட்டை ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி சமையலர் பணிக்கான ஆணையை வழங்கினார்.