/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சமணர் படுக்கை கலெக்டர் பழனி 'விசிட்'
/
சமணர் படுக்கை கலெக்டர் பழனி 'விசிட்'
ADDED : ஆக 24, 2024 07:10 AM

செஞ்சி: நெகனுார பட்டியில் உள்ள சமணர் படுக்கையை கலெக்டர் பழனி பார்வையிட்டார்.
செஞ்சியை அடுத்த நெகனுார் பட்டி கிராமத்தில் 4ம் நுாற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் எழுத்து கல்வெட்டும், சமண படுக்கையும் உள்ளது. இந்த இடத்தில் சமண துறவிகள் தங்கி தியானம் மேற்கொண்டதுடன், சிகிச்சையும் மேற்கொண்டுள்ளனர். இந்த பகுதியை தமிழக தொல்லியல் துறை கையகப்படுத்தி பாதுகாத்து வருகிறது.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் வல்லம் ஒன்றியத்தில் ஆய்வு செய்த கலெக்டர் பழனி நெகனுார் பட்டி சமண படுக்கையை பார்வையிட்டார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது தாசில்தார் ஏழுமலை, வி.ஏ.ஓ., திருநாவுக்கரசு, சமணர் ஒருங்கிணைப்பாளர் ஜோலாதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

