/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்ணபிரான் கோவில் மகா கும்பாபிஷேகம்
/
கண்ணபிரான் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஆக 31, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த புது சொரத்துார் காளிங்க நர்த்தன கண்ணபிரான் கோவிலில் ஜீர்னோத்தாரண மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி இரவு 9:00 மணிக்கு முதல்கால யாகசாலை ஹோமம் நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூபம், கோபூஜை, இரண்டாம் கால யாகசாலை ஹோமமும், 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 8:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு உறியடி திருவிழாவும், இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.