/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் குழந்தைகளை காப்போம் வானுாரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பெண் குழந்தைகளை காப்போம் வானுாரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண் குழந்தைகளை காப்போம் வானுாரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண் குழந்தைகளை காப்போம் வானுாரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 10, 2024 05:24 AM

வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பெண் குழந்தைகளைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) வில்லியம் தலைமை தாங்கி, பெண் குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அவர்களுக்கான அதிகாரம் குறித்து பேசினார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் புவனேஸ்வரி, புதுச்சேரி சித்தா மண்டல ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் டாக்டர் சண்முகம், தைலாபுரம் மருத்துவமன டாக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் பெண் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து, உடல் நலன் குறித்து சிறப்புரையாற்றினர்.
ஊட்டச்சத்து குறித்த நடந்த கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர் ராஜலட்சுமி பரிசு வழங்கினார்.
இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகரி மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.