ADDED : மே 02, 2024 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., அலுவலகத்தில் மே தின விழா செங்கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி செங்கொடியேற்றி, நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில், செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், மூர்த்தி, ராஜேந்திரன், மாநில செயலாளர் அம்பிகாபதி, மாதர் சங்கம் நீலா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நகர நிர்வாகி மேகநாதன் நன்றி கூறினார்.

