/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புத்துவாய் அம்மன் கோவிலில் மாசி மக உற்சவம்
/
புத்துவாய் அம்மன் கோவிலில் மாசி மக உற்சவம்
ADDED : மார் 14, 2025 05:06 AM

விழுப்புரம்: கோலியனூர் புத்துவாய் அம்மன் கோவிலில், மாசி மக உற்சவம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த கோலியனூரில் உள்ள புத்துவாய் அம்மன் கோவிலில், மாசி மக உற்சவம் நடந்தது. காலை 10.00 மணிக்கு மூலவர் புத்துவாய் அம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், இளவீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதனையடுத்து, மூலவர் புத்துவாய் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடந்தது. இரவு 9.00 மணிக்கு உற்சவர் திருவீதியுலா புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கோலியனூர் புத்துவாய் அம்மன் உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.