நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: கிளியனுார் அருகே திருமணம் ஆகாததால் மன முடைந்த கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிளியனுார் அடுத்த ஆதனப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தயாளன், 43; கொத்தனார்.
இவருக்கு திருமணம் ஆகாததால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள அவரது நிலத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் இறந்தார்.
புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.