/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம், ரெட்டணை ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்ற வேண்டும் மயிலம் எம்.எல்.ஏ.,சிவக்குமார் கோரிக்கை

ADDED : ஜூன் 27, 2024 03:02 AM

மயிலம்: மயிலம் சட்டசபை தொகுதியில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் எதுவும் இல்லாததால் மயிலம்,ரெட்டணை ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மயிலம் எம்.எல்.ஏ.,சிவக்குமார் பேசியதாவது;
மயிலம் சட்டசபை தொகுதி சீரமைப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு மயிலம் புதிய சட்டசபை தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதுவரையில் இந்த பகுதியில் நகராட்சி, பேரூராட்சிக்கள் இல்லாமல் அனைத்து பகுதிகளும் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது. எனவே மயிலம், ரெட்டணை ஊராட்சிகளை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும். மயிலம் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் அமைத்துக் கொடுத்தால் இந்த பகுதியில் உள்ள ஏழை மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். மயிலம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் திண்டிவனம், செஞ்சி போன்ற பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் நிலை உள்ளது. எனவே ரெட்டணை, பெரியதச்சூரில் புதியதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
வல்லம் ஒன்றியத்தில் திருவண்ணாமலை மாவட்டம் அருகே உள்ள கிராமங்களில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கிராம மக்கள் வருவது என்றால் 30 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி வரும் நிலை உள்ளது. எனவே வல்லத்தில் புதியதாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும்.மயிலம் ஒன்றியத்தில் உள்ள நெடி மொழியனூர், தென் ஆலப்பாக்கம்ஊராட்சிகளை பிரித்து நெடி, கொரளூர் என இரு புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டுமென எம் எல் ஏ சிவகுமார் பேசினார்.