/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பெயர் அரசு விழா அழைப்பிதழில் 'மிஸ்சிங்'
/
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பெயர் அரசு விழா அழைப்பிதழில் 'மிஸ்சிங்'
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பெயர் அரசு விழா அழைப்பிதழில் 'மிஸ்சிங்'
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பெயர் அரசு விழா அழைப்பிதழில் 'மிஸ்சிங்'
ADDED : ஆக 11, 2024 06:58 AM

விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவுக்கான அழைப்பிதழில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை, கோவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதில், அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அமைச்சர் மஸ்தான் மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஏ.டி.எம்., கார்டை வழங்கினார்.
விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன், சிவக்குமார் பங்கேற்றனர். ஆனால், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வானுார் சக்கரபாணி, திண்டிவனம் அர்ஜூனன் புறக்கணித்தனர். இதற்கான காரணம் குறித்து மாவட்ட அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'இரு எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஒரு நாள் முன்னதாக நேற்று (8ம் தேதி) தகவல் தெரிவிக்கப்பட்டது. முடிந்தவரை வருவதாக சொன்ன இருவரும் வரவில்லை' என்றனர்.