நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே மனநலம் பாதித்த முதியவரை காணவில்லை.
வளவனுார் அருகே வாணியசத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன்,65; சற்று மனநலம் பாதித்த இவர், கடந்த 29ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். மீண்டும் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் குடும்பத்தார் பல இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை.
இது குறித்து உறவினர் அருண்குமார் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

