/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பகுதி நேர ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
/
பகுதி நேர ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
பகுதி நேர ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
பகுதி நேர ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 30, 2024 12:00 AM

விழுப்புரம்: பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராதா தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் கீதா, பிரசார செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். ரவிக்குமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, இந்திய கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கை 181ஐ நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.