/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெரமண்டூர் கோவில் கும்பாபிஷேகம்
/
பெரமண்டூர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 10, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் திரவுபதி அம்மன், செல்லியம்மன், கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழா, கடந்த 7ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. 8ம் தேதி கோ பூஜையும், முதல்கால யாகசாலை பூஜையும், மாலை இரண்டாம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 7:00 மணியளவில் கலச புறப்பாடு நடந்து காலை 9:00 மணிக்கு மேல் கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.