/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெரியதச்சூர் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
/
பெரியதச்சூர் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 23, 2024 07:18 AM

மயிலம்: மயிலம் அடுத்த பெரியதச்சூர் அகத்தீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
மயிலம் அருகே உள்ள பெரிய தச்சூர் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19ம் தேதி மாலை 5:00 மணிக்கு விநாயகர், வழிபாடு நடந்தது. 8:30 மணிக்கு கோ பூஜை, விளக்கு, சுமங்கலி பூஜை, வேள்வி வழிபாடு நடந்தது.
20ம் தேதி மாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி வழிபாடு நடந்தது. 21ம் தேதி காலை 6:30 மணிக்கு திருபள்ளியெழுச்சி, பின்னர் மருந்து சாத்துதல், யாகசாலை வழிபாடு நடந்தது.
22ம் தேதி காலை 5:00 மணிக்கு நான்காவது யாகசாலை வழிபாடு, 7:00 மணிக்கு நாடி சந்தானம், ஒன்பது மணிக்கு கடம் புறப்பாடு, தொடர்ந்து பக்தர்கள் திருக்குடத்தில் புனித நீரை எடுத்து சென்றனர்.
காலை 9:45 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் கோவில் கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பைரவர், பிரித்திங்கரா தேவி சனீஸ்வர சுவாமி சந்நிதிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்கள்.
இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய பரம்பரை அறங்காவலர் சிவஸ்ரீ குருக்கள் மற்றும் ஆலய அர்ச்சகர் சிவக்குமார் மற்றும் பெரிய தச்சூர் கிராம பொதுமக்கள், திருக்கோயில் உற்சவ உபயதாரர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

