/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் ரயில் நிலையத்தில் பிளாட் பார்ம் உயரப்படுத்தும் பணி
/
திண்டிவனம் ரயில் நிலையத்தில் பிளாட் பார்ம் உயரப்படுத்தும் பணி
திண்டிவனம் ரயில் நிலையத்தில் பிளாட் பார்ம் உயரப்படுத்தும் பணி
திண்டிவனம் ரயில் நிலையத்தில் பிளாட் பார்ம் உயரப்படுத்தும் பணி
ADDED : மே 05, 2024 06:04 AM

திண்டிவனம், : திண்டிவனம் ரயில்நிலையத்திலுள்ள பிளாட் பார்மை உயரப்படுத்தும் பணி நடந்து வருகின்றது.
திண்டிவனத்திலுள்ள ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் வந்து செல்கின்றது. திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர் .ரயில் நிலையத்தில் மூன்று பிளாட் பார்ம்கள் உள்ளது. இதில் ஒன்று மற்றும் இரண்டு பிளாட் பார்ம்களை விட, மூன்றாவது பிளாட் பார்ம் உயரம் குறைவாக இருந்து வந்தது. இதனால் பயணிகளுக்கு சிரமம் இருந்து வந்தது.
இதை தொடர்ந்து ரயில்வே பொறியியல் துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில், மூன்றாவது பிளாட் பார்மின் தரையை உயரப்படுத்தும் பணி மற்றும் மற்ற இரண்டு பிளாட் பார்ம்களை பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
இது இல்லாமல், நகரப்பகுதியிலிருந்து ரயில் நிலையத்திற்கு வரும் நுழைவாயில் பகுதியிலுள்ள சாலை குண்டும், குழியமாக இருந்தது. தற்போது பழுதடைந்த சாலையில், புதிய தார் சாலை போடும் பணி நடந்து வருகின்றது.