/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'
ADDED : ஆக 29, 2024 11:49 PM
செஞ்சி: விழுப்புரம் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
கோலியனுாரை சேர்ந்தவர் காந்தி மகன் பிரதாப், 20; கூலித் தொழிலாளி. இவர், விழுப்புரம் அடுத்த ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்துவந்தார். அங்கு, 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பிரதாப் நெருங்கி பழகினார்.
இந்நிலையில், சிறுமிக்கு கடந்த 24ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சிறுமியை பிரதாப் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இது குறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து பிரதாப்பை தேடி வருகின்றனர்.