/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் மீது 'போக்சோ'
/
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் மீது 'போக்சோ'
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் மீது 'போக்சோ'
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் மீது 'போக்சோ'
ADDED : செப் 03, 2024 06:11 AM
செஞ்சி : செஞ்சி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செஞ்சி அடுத்த பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் மகன் ரவிச்சந்திரன், 23; இவர் 16 வயதுடைய 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கடந்த ஆண்டு காதலித்து திருப்பதி அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். திருப்பதியில் தங்கியிருந்த இருவரும் சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்து தனியாக குடும்பம் நடத்தினர்.
சிறுமி கர்ப்பமானதால் பிரசவத்திற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு சிறுமிக்கு 18 வயது நிறைவடையாதது தெரியவந்தது.
செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.