/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
/
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : செப் 18, 2024 04:47 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் தடுப்பது குறித்து, காவல் துறை மொபைல் வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறையின், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவு சார்பில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, குழந்தை திருமணம், போக்சோ குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து, காவல் துறை மொபைல் வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், வாகனம் மூலம் டிஜிட்டல் திரையில் குறும்படம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏ.டி.எஸ்.பி., தினகரன், இன்ஸ்பெக்டர்கள் கீதா, சேகர், சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட குழுவினர், பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.