/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணற்றில் வாலிபர் உடல் போலீஸ் விசாரணை
/
கிணற்றில் வாலிபர் உடல் போலீஸ் விசாரணை
ADDED : செப் 10, 2024 12:19 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் கிணற்றில் கிடந்த வாலிபர் உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம், கிடங்கல் (1) பாரதிதாசன் பேட்டையைச் சேர்ந்தவர் சம்பத் மகன் சுந்தரமூர்த்தி, 23; இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை அதே பகுதியில் உள்ள திருநாவுக்கரசர் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள தரைக்கிணற்றில், சுந்தரமூர்த்தியின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகையன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.